/* */

வேட்டவலத்தில் மனுநீதி நாள் முகாமிற்காக மனுக்கள் பெறும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் மனுநீதி நாள் முகாமிற்காக மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

வேட்டவலத்தில் மனுநீதி நாள் முகாமிற்காக மனுக்கள் பெறும் நிகழ்ச்சி
X

மனுநீதி நாள் முகாமிற்காக பொதுமக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக பெறும் நிகழ்ச்சி வருவாய் ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வருகிற 24-ந்தேதி மனுநீதி நாள் முகாம் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

மனுநீதி நாள் முகாமிற்காக பொதுமக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக பெறும் நிகழ்ச்சி வருவாய் ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் சக்கரை, சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் பன்னீர்செல்வம், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் முருகையன், பேரூராட்சி மன்ற தலைவர் கவுரி நடராஜன், வட்ட சார் ஆய்வாளர் சாகுல் அமீது, துணை வட்டாட்சியர் பொன்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் அல்லி வரவேற்றார்.

சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் வெங்கடேசன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து பட்டா மாறுதல், உட்பிரிவு மாறுதல், முதியோர் உதவித்தொகை விண்ணப்பம், இலவச தையல் எந்திரம், இலவச வீட்டுமனை பட்டா, மாநில அரசின் இலவச வீடுகள் வழங்கும் திட்டத்திற்கான மனுக்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை சார்ந்த மனுக்களும் பெறப்பட்டன.

இதில் குறுவட்ட சார் ஆய்வாளர் சென்னையன், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் ஜெயலட்சுமி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் வேட்டவலம் கிராம நிர்வாக அலுவலர் ராஜீவ்காந்தி நன்றி கூறினார்.

Updated On: 1 April 2022 5:18 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  2. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  3. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  6. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  7. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  8. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  9. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  10. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?