திருவண்ணாமலை அருகே சுடுகாடு வசதியின்றி அடக்கம் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு
திருவண்ணாமலை தாசில்தார் மற்றும் மண்டல துணை தாசில்தார், போலீசார் நேரடியாக அந்த பகுதிக்கு விரைந்து வந்து சமாதானக் பேச்சுவார்த்தைநடத்தினர்.
திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் வட்டத்திற்குட்பட்ட வட ஆண்டா பட்டு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
அந்தபகுதியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு எந்தவிதமான சுடுகாடு வசதியும் இல்லாததால் அந்த கிராம மக்கள் கடும் சிரமத்தை உள்ளாகியுள்ளனர்.
இதுதொடர்பாக பலமுறை கலெக்டர் மற்றும் தாசில்தார், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில்நேற்று அந்தப் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் இறந்து விட்டார்.அவரது உடலை அடக்கம் செய்யமுடியாமல் தவித்த அந்தப் பகுதி மக்கள் தலித் விடுதலை இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தலித் விடுதலை இயக்கத்தின் நிர்வாகிகள் நேரடியாக அந்தப் பகுதிக்குச் சென்று, இறந்தவர் உடலை சாலையில் வைத்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
இதுபற்றி அறிந்த திருவண்ணாமலை தாசில்தார் மற்றும் மண்டல துணை தாசில்தார், போலீசார் நேரடியாக அந்த பகுதிக்கு விரைந்து வந்து சமாதானக் பேச்சுவார்த்தைநடத்தினர்.
இதில் அந்தப் பகுதி மக்களுக்கு உடனடியாக சர்வே செய்து சுடுகாடு அமைக்க இடம் வழங்குவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொது மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu