கீழ்பென்னாத்தூர்: பட்டா மாறுதல் சிறப்பு முகாம்

கீழ்பென்னாத்தூர்: பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
X

சிறப்பு பட்டா மாறுதல் முகாம், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சிஆறுமுகம்  பயனாளிகளுக்கு வழங்கினார்.

வேடநத்தம், கெங்கைசூடாமணி, இசுக்கழிகாட்டேரி கிராமங்களில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா சிறுநாத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு உட்பட்ட குண்ணங்குப்பம், வேடநத்தம், ராயம்பேட்டை ஆகிய ஊர்களுக்கான சிறப்பு பட்டா மாறுதல் முகாம் வேடநத்தம் கிராமத்தில் உள்ள அய்யனாரப்பன் கோவில் அருகில் நடந்தது.

சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் வேடநத்தம் குப்புசாமி, சிறுநாத்தூர் சித்ராபரந்தாமன், மண்டல துணை தாசில்தார் பொன்விழி, வருவாய் ஆய்வாளர் சுதா, வட்ட சார் ஆய்வாளர் முனியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுநாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் மதியழகன் வரவேற்றார்.

முகாமில் பொதுமக்களிடம் இருந்து பட்டா மாற்றம், பெயர் திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 54 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 26 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, அதற்கான ஆணையை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு முகாமிலேயே சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சிஆறுமுகம் வழங்கினார்.

முகாமில் அட்மா ஆலோசனைக்குழு தலைவர் சோமாசிபாடி சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, நகர ஆதிதிராவிடர் நல அமைப்பாளர் கருணாநிதி, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மேக்களூர் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!