கல்பூண்டி கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்

கல்பூண்டி கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
X

கீழ்பெண்ணாத்தூர் அடுத்த கல்பூண்டி கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது. 

கீழ்பெண்ணாத்தூர் அடுத்த கல்பூண்டி கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் அடுத்த கல்பூண்டி கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு, மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கீழ்பெண்ணாத்தூர் வட்டாட்சியர் சர்க்கரை வரவேற்றார். முகாமில் பொதுமக்களிடம் இருந்து, 87 கோரிக்கை மனுக்களை மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி பெற்றுக் கொண்டார்.

இவற்றில் 25 மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டன. இதில் மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் சுதா, சோமாசிபாடி சிவகுமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆறுமுகம், கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பன்னீர்செல்வம், ஊராட்சி தலைவர் மகாலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!