கீழ்பெண்ணாத்தூர் அருகே ஆரம்ப சுகாதார நிலைய ஸ்கேன் மையம் திறப்பு
கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கிய துணை சபாநாயகர் பிச்சாண்டி
சோமாசிபாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய ஸ்கேன் மையத்தை துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியம் சோமாசி பாடிய ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 4.5, லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஸ்கேன் மைய திறப்பு விழாவிற்கு மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு,ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் அனைவரையும் வரவேற்று பேசினார்
விழாவில் சிறப்பு விருந்தினராக துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு புதிய ஸ்கேன் மையத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.
விழாவில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் மக்களை தேடி மருத்துவம் மருந்துகளை துணை சபாநாயகர் வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், மருத்துவத்துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்தார். மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஸ்கேன் மையங்கள் உட்பட அனைத்து வசதிகளும் படிப்படியாக தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி போன்ற தொலைதூர இடங்களுக்கு செல்லாத வகையில் பிரசவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது, கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டம், மக்களைத் தேடி மருத்துவ திட்டம் என பொதுமக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகிறார், என துணை சபாநாயகர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அட்மா குழு தலைவர் சிவகுமார், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கயல்விழி ,மருத்துவர்கள் புவனேஸ்வரி ,சுகாதார ஆய்வாளர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயா சேகர், குப்பு ஜெயக்குமார் ,ஒன்றிய கவுன்சிலர் அரிபாலன், ஊராட்சி செயலாளர் சங்கர் ,திமுக தேர்தல் பணி குழு செயலாளர் குணசேகரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணிகண்டன், திமுக கிளை செயலாளர்கள், செவிலியர்கள், வட்டார மருத்துவ துறை அலுவலர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், சுகாதார மைய அதிகாரிகள் ,பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu