கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் புதிய ரேஷன் கடை அங்கன்வாடி மையம் திறப்பு

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் புதிய ரேஷன் கடை அங்கன்வாடி மையம் திறப்பு
X

நிழற்குடையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்த துணை சபாநாயகர் பிச்சாண்டி.

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் புதிய ரேஷன் கடை, அங்கன்வாடி மையத்தை துணை சபாநாயகர் திறந்து வைத்தார்.

துரிஞ்சாபுரம் ஒன்றியம் சாலியனூர் கிராமத்தில் திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை மக்கள் பயன்பாட்டுக்கு துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

கீழ்பெண்ணாத்தூர் தொகுதி வேட்டவலம் பகுதியில் ரூபாய் 61 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையங்கள் மற்றும் பகுதிநேர ரேஷன் கடைகளை துணை சபாநாயகர் பிச்சாண்டி நேற்று திறந்து வைத்தார்.

வேட்டவலம் தாலுக்கா ஆவூர், அணுக்கு மலை ஆகிய ஊராட்சிகளில் ரூபாய் 61 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்கள் பகுதிநேர ரேஷன் கடைகள் ,நெற்களம், ஜல்லி சாலை ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை வகித்தார். ஒன்றிய குழு தலைவர் அய்யாகண்ணு, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சம்பத், ஒன்றிய குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துணை ஷபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு புதிய ரேஷன் கடை கட்டிடம், அங்கன்வாடி மைய கட்டிடம் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து நியாய விலை கடைகளில் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சார்பதிவாளர் மீனாட்சி சுந்தரம் வேட்டவலம் பேரூராட்சி தலைவர், ஒன்றிய குழு துணை தலைவர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் ,ஊராட்சி செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உறுப்பினர்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!