வெறையூர் பேருந்து நிறுத்தம் புதிய நிழற்குடை திறப்பு

வெறையூர் பேருந்து நிறுத்தம் புதிய நிழற்குடை திறப்பு
X

வெறையூர் பேருந்து நிறுத்தம் புதிய நிழற்குடையை  திறந்து வைத்த  துணை சபாநாயகர் 

வெறையூர் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் புதிய நிழற்குடையை, துணை சபாநாயகர் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் வெறையூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்த புதிய நிழற்குடையை, தமிழக சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி பொதுமக்கள்பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் வெறையூர் கிராமத்தில் புதிய நிழற்குடை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார்.

சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு புதிய நிழற்குடையை திறந்து வைத்து பேசுகையில்,

தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்த அரசு எந்த அளவிற்கு அக்கறை எடுத்துக் கொண்டுள்ளது என்பதற்கு, நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கும் 40 இடங்களில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி வெற்றி பெற்று இருப்பதே சாட்சி. இன்றைக்கு 20 லட்சம் ரூபாய் ஒதுக்கி இந்த நிழற்குடை கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்துள்ளேன். மேலும் வெறையூர் ஏரிக்கு சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் வெறையூர் பொதுமக்களுக்கு தண்ணீர் இல்லை என்ற ஒரு சூழல் உருவாகவில்லை.

வெறையூரில் 5 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மேம்பாலம், அதே போல் சு .வாழாவெட்டிக்கு புதிய மேம்பாலம், வலசை பகுதிக்கு புதிய மேம்பாலம் என பல கோடி ரூபாய் மதிப்பில் பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது.

மேலும் இந்த கூட்டத் தொடரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் தண்டரைக்கு ஓர் அணைகட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததின் பேரில், 4.5 கோடி ரூபாய் ஒதுக்கி தண்டரைக்கு புதிய பாலம் கட்ட பணம் ஒதுக்கி உள்ளார். இவ்வாறு சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி கூறினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றிய குழு பெருந்தலைவர் கலைவாணி கலைமணி, ஒன்றிய குழு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், போக்குவரத்து கழக அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!