கீழ்பெண்ணாத்தூர் அருகே ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் தொட்டி திறப்பு

கீழ்பெண்ணாத்தூர் அருகே ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் தொட்டி திறப்பு
X

குடிநீர் தொட்டியை துணை சபாநாயகர் திறந்து வைத்தார்

கீழ்பெண்ணாத்தூர் அருகே ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி, துணை சபாநாயகர் திறந்து வைத்தார்.

கீழ்பெண்ணாத்தூர் தொகுதிக்குட்பட்ட சீலபந்தல் மதுரா புதுமன்னை கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துலை கிணறு மற்றும் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டது.

இதனை துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்து பேசுகையில், அரசு ஒவ்வொரு அடிப்படை வசதிகளையும் மக்களுக்காக மக்களின் தேவை அறிந்து செய்து வருகிறது. இதனை வீணாக்காமல் பொது சொத்து என்று கருதாமல் நமது என்று நினைத்து பயன்படுத்த வேண்டும் .

மேலும் கிராமப்புறங்களில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் வீடுகளை உடனுக்குடன் கட்டி முடியுங்கள். தமிழக அரசு வழங்கும் திட்டங்களை முழுமையாக பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.. தமிழக அரசின் சாதனைகள் தொடரும். இவ்வாறு பேசினார்.

நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் தமயந்தி ஏழுமலை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் அண்ணாமலை பீடிஓக்கள் கிருஷ்ணமூர்த்தி, விஜயலட்சுமி யூனியன் கவுன்சிலர் ஏழுமலை பஞ் தலைவர் யசோதா உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்