வாகன விபத்தில் ஒருவர் பலி

வாகன விபத்தில் ஒருவர் பலி
X

கோப்புப்படம்

கீழ்பென்னாத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி.

சென்னையை சேர்ந்த பத்மநாபன் வயது 36. இவரின் நண்பர் கடந்த சில தினங்களுக்கு முன்பு விபத்தில் காயமடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பத்மநாபன், தனது நண்பரை பார்ப்பதற்காக சென்னையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வரும்போது, திண்டிவனம் ரோடு தனியார் பள்ளி அருகில் கொழுந்தம்பட்டு தனியார் சுகர் மில்லில் இருந்து சர்க்கரை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்ற லாரி மோதிய விபத்தில். தலை மற்றும் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் பத்மநாபனின் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்