கீழ்பெண்ணாத்தூரில் புதிய தாா்ச்சாலை: பேரவை துணைத்தலைவா் ஆய்வு

கீழ்பெண்ணாத்தூரில் புதிய தாா்ச்சாலை: பேரவை துணைத்தலைவா் ஆய்வு
X

புதிய தார் சாலை அமைக்கும் பணியினை ஆய்வு செய்த துணை சபாநாயகர்

கீழ்பென்னாத்தூரில் புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணியினை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சியில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சியில் 14 வது வார்டு காசி நகர் பகுதியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்த காரணத்தால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இதனை கருத்தில் கொண்டு கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஆன பிச்சாண்டி, முயற்சியால் நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ. 88 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இப்பணியினை தொகுதி எம்எல்ஏவும், தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தார் சாலை அமைக்கும் பணியினை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது நகர திமுக செயலாளர் அன்பு, மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம், பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் சரவணன், துணைத்தலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி, பேரூராட்சி கவுன்சிலர்கள் மணி ,பாக்கியராஜ், ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், நகர இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஊராட்சி ஒன்றிய ஒப்பந்தக்காரர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் வேட்டவலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை குவித்த மாணவிகளை துணை சபாநாயகர் பிச்சாண்டி பாராட்டினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி வேட்டவலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வட்ட அளவிலான நடைபெற்ற தடகள போட்டியில் 14, 17, 19 ஆகிய வயது பிரிவில் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை குவித்தனர்.

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி சான்று வழங்கி பாராட்டினார். உடன் தலைமையாசிரியயை மற்றும் இருபால் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
the future of ai in healthcare