திருவண்ணாமலையிலிருந்து ஆராஞ்சி வழியாக கீழ்பெண்ணாத்தூர் புதிய பேருந்து வசதி

திருவண்ணாமலையிலிருந்து ஆராஞ்சி வழியாக கீழ்பெண்ணாத்தூர் புதிய பேருந்து வசதி
X

புதிய பேருந்து வசதியை தொடங்கி வைத்த துணை சபாநாயகர்.

திருவண்ணாமலையிலிருந்து ஆராஞ்சி வழியாக கீழ்பெண்ணாத்தூர் புதிய பேருந்து வசதியை துணை சபாநாயகர் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலையிலிருந்து பள்ளி கொண்டா பட்டு, சம்மந்தனூர், ஆராஞ்சி வழியாக சோமாசி பாடி, கீழ்பெண்ணாத்தூர் வரையிலான பேருந்து போக்குவரத்து வசதி இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து கீழ்பெண்ணாத்தூர் தொகுதி எம்எல்ஏவும் சட்டப்பேரவை துணை சபாநாயகர்ருமான பிச்சாண்டியிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கி முறையிட்டனர் . இதனை கருத்தில் கொண்டு அவரது நடவடிக்கையின் பேரில் கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியம் ஆராஞ்சி கிராமத்தில் புதிய வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்து தொடக்க விழா நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் செந்தில், கலைச்செல்வன் தொமுச பேரவை பொதுச் செயலாளர் சௌந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு புதிய பேருந்து போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த புதிய வழித்தடத்தில் தினமும் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் காலை 7 மணிக்கு பேருந்து புறப்பட்டு பள்ளி கொண்டாப்பட்டு, சம்மந்தனூர், ஆராஞ்சி வழியாக சோமாசி பாடி ,கிழ்பெண்ணாத்தூருக்கு காலை 7. 40 மணிக்கு வந்தடைகிறது. மீண்டும் அதே வழித்தடத்தில் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தை வந்தடைகிறது.

இந்த விழாவில் ஒன்றிய குழு துணைத் தலைவர் வாசுகி ஆறுமுகம், ஊராட்சி மன்ற தலைவர் விஜயா சேகர் ,துணைத்தலைவர் சுலோச்சனா, திமுக கிளை செயலாளர்கள் ,போக்குவரத்து கழக ஊழியர்கள், அதிகாரிகள், ஒன்றிய தலைவர்கள், ஒன்றிய செயலாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து கீழ்பெண்ணாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கல்களை துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார்.

கீழ்பெண்ணாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடந்த விழாவில் துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு பிளஸ்-1 படிக்கும் மாணவ மாணவிகள் 449 பேருக்கு தமிழக அரசின் விலை வழங்கியும் ,பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கி வரும் பல்வேறு நல திட்ட உதவிகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரையும் வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட பிரதிநிதிகள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், நல அமைப்பாளர்கள், வட்ட செயலாளர்கள், வட்டார கல்வி அதிகாரிகள் , உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்