திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் வாக்கு சேகரித்த அமைச்சர் வேலு

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் வாக்கு சேகரித்த அமைச்சர் வேலு
X

திருவண்ணாமலை திமுக வேட்பாளர் அண்ணாதுரைக்கு வாக்கு சேகரித்த அமைச்சர் வேலு மற்றும் துணை சபாநாயகர் பிச்சாண்டி

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரைக்கு அமைச்சர் வேலு வாக்கு சேகரித்தார்

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு திமுகவின் சார்பில் மூன்றாவது முறையாக போட்டியிடும் அண்ணாதுரை தனது வேட்பு மனுவை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் இடம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை அடுத்த கீழ்பெண்ணாத்தூர் தொகுதிக்குட்பட்ட மங்கலம் பகுதியில் திருவண்ணாமலை திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவர்களை ஆதரித்து பொதுப்பணித்துறை அமைச்சரும் திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளர் எ.வ.வேலு, அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது;

சென்ற முறை நாடாளுமன்ற உறுப்பினராக அண்ணாதுரை வெற்றி பெற்ற போது 3.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், அதே போல இந்த முறையும் அதைவிட பெரிய அளவில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற வேண்டும். அதற்கு பொதுமக்கள் நீங்கள் முழு ஆதரவை திமுக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

அதேபோல் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் துணை சபாநாயகர் பிச்சாண்டி, இந்த ஒன்றியத்தில் உள்ள மங்களம் உள்ள ஊராட்சியில் பல வளர்ச்சி பணிகளை செய்துள்ளார். இதில் 49 லட்சத்தில் போர் மன்னர் லிங்கேஸ்வரர் கோயில் தேர் அமைத்து அதனை பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும் 3.20 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம், 1.5 கோடி மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் இது போன்ற பல வளர்ச்சிப் பணிகளை அதிகளவு இப்பகுதியில் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

நாங்கள் மூன்றாண்டு காலத்தில் செய்த பல திட்டங்களை சுட்டி காட்டி தற்போது வாக்கு சேகரித்து வருகிறோம்.

எட்டு மாவட்ட மக்கள் மழை வெள்ளத்தில் பாதிப்பில் தவித்த போது மத்திய அரசு ஒரு நயா பைசா கூட வழங்கவில்லை, நாங்கள்தான் முகாம் அமைத்து மக்களோடு மக்களாக இருந்து மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தோம்.

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெரும் வெள்ளம் வந்த நிலையில் திமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றியதாகவும், தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்ப்பதற்காக மத்திய நிதி அமைச்சர் வந்த நிலையில் மத்திய அரசு ஒரு பைசா கூட நிவாரணத் தொகையாக வழங்கவில்லை என வேலு குற்றம் சாட்டி பேசினார்.

தற்போது மூன்றாவது அணி என்ற போர்வையில் பாஜக போட்டி போடுகிறது. உண்மையிலேயே இரண்டாம் இடத்திற்கு யார் வருவது என்ற போட்டி தான் பாஜக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு இடையே உள்ளது என அமைச்சர் பேசினார்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, மாநில மருத்துவர் அணி துணை தலைவர் எ.வ.வே.கம்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் குமார், மதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், விசிக மாவட்ட செயலாளர் நியூட்டன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், அணி அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!