மன்னாா் சாமி கோவிலில் மண்டல பூஜை , துணை சபாநாயகர் பங்கேற்பு
மன்னாா்சாமி கோவிலில் நடைபெற்ற மண்டல பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை சபாநாயகர் பிச்சாண்டி
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட முன்னூா்மங்கலம் கிராமத்தில் உள்ள மன்னாா்சாமி கோவிலில் மண்டல பூஜை நடைபெற்றது.
முன்னூா்மங்கலம் கிராமத்தில் மன்னாா்சாமி கோவில் புதிதாக கட்டப்பட்டு அதன் கும்பாபிஷேகம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, தினசரி காலை மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று, செவ்வாய்க்கிழமை மண்டல பூஜை நடத்தப்பட்டது. இதில், பலவேறு நவகிர ஹோமங்கள் நடைபெற்றன.
விழாவில் சிறப்பு விருந்தினராக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தாா்.
முன்னதாக, கோவில் அறங்காவலா் வடிவேலன் தலைமையில், கு.பிச்சாண்டிக்கு கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவில் முன்னூா்மங்கலம் ஊராட்சித் தலைவா் மகேஸ்வரி சுதாகா், அடிவாரம் முன்னாள் தலைவா் மாதவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னர் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள இனாம் காரியங்கள் ஊராட்சியில் உள்ள வெங்காயம் வேலூர் முதல் காஞ்சி வரை புதிய தார் சாலை அமைப்பதற்கு சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஆய்வு செய்தார்.
அப்போது துணை சபாநாயகர் கூறுகையில்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் மூலம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் மூலமும் புதிய தார் சாலை அமைப்பதற்கு ரூபாய் 61 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து புதிய தார் சாலை அமைப்பதற்கு இடத்தை தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சாலை கீழ்பெண்ணாத்தூர் தொகுதி , துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் இருந்து திருவண்ணாமலை தொகுதியில் சென்று கலசப்பாக்கம் தொகுதி புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள காஞ்சி வரை இந்த சாலை செல்கிறது.
தற்போது உள்ள சாலை மூலம் மக்கள் தற்போது 30 கிலோமீட்டர் சுற்றி தான் செல்கிறார்கள். இந்த புதிய சாலை அமைத்தால் இதன் மூலம் மக்கள் சுலபமான ஒரு வழியாக இருக்கும், இந்த வழியில் சுமார் 17 கிலோ மீட்டர் தூரத்தில் சுலபமான முறையில் சென்று வரலாம் என துணை சபாநாயகர் ஆய்வின் போது தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை , வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி, பொறியாளர் பிரசன்னா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu