மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் துணை சபாநாயகர் பங்கேற்பு

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்   துணை சபாநாயகர் பங்கேற்பு
X

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை தொடங்கி வைத்த துணை சபாநாயகர்

Makkaludan Muthalvar Camp Inaguration கீழ்பெண்ணாத்தூர் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை துணை சபாநாயகர் தொடங்கி வைத்தார்

Makkaludan Muthalvar Camp Inaguration

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் கீழ்பெண்ணாத்தூர் அவலூர் பேட்டை செல்லும் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். நகர திமுக செயலாளர் அன்பு, மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி திட்ட அலுவலர் அருள், மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.

முகாமில் சிறப்பு விருந்தினராக துணை சபாநாயகர் பிச்சாண்டி, கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில்தான் மக்களுடன் முதல்வர் என்னும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சியில் ஒன்று முதல் 8 வார்டுகள் வரையிலும் நாளை 9 முதல் 15 வார்டுகளில் வசிக்கும் பொது மக்களிடம் இருந்து மின் இணைப்பு பெயர் மாற்றம், பட்டா மாறுதல், வாரிசு சான்று, பிறப்பு சான்று, இருப்பிட சான்று, அரசு கடன் உதவி, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உட்பட 13 வகையான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு கணினியில் பதிவு செய்து. ஒப்புகை சீட்டு வழங்கப்படுகிறது . மனுக்கள் பெற்ற 30 நாளுக்குள் அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணும் வகையில் இந்த அற்புதமான திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார்.

மக்களை தேடி திட்டங்களையும் நிறைவேற்றும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இதனை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொண்டு இந்த அரசுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுகுணா, அட்மா தலைவர் சிவகுமார், வட்டார மருத்துவ அலுவலர் சரவணன், துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் இளையராஜா, பேரூராட்சி துணைத் தலைவர் தமிழரசி மற்றும் வார்டு கவுன்சிலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் , பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!