/* */

மக்கள் தேவைகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் நிறைவேற்ற வேண்டும்: பேரவை துணைத்தலைவர்

மக்கள் தேவைகளை நிறைவேற்றுவதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் முழு கவனம் செலுத்த வேண்டும் என தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

மக்கள் தேவைகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் நிறைவேற்ற வேண்டும்: பேரவை துணைத்தலைவர்
X

வெங்காய வேலூர் ஏரியை பார்வையிட்ட பேரவை துணைத்தலைவர் கு. பிச்சாண்டி

கீழ்பென்னாத்தூர் தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றியம் இனாம் காரியந்தல் ஊராட்சிக்குட்பட்ட வெங்காய வேலூர் ஏரி தொடர் மழையின் காரணமாக நிரம்பியுள்ளதையொட்டி தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, இன்று அங்கு நேரில் சென்று ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை பார்வையிட்டார்.

பின்னர் துரிஞ்சாபுரம் ஒன்றிய குழு கூட்டம் அதன் தலைவர் தமயந்தி ஏழுமலை தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டதுணை சபாநாயகர் மக்கள் தேவைகளை நிறைவேற்றுவதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் முழு கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்திலேயே துரிஞ்சாபுரம் ஒன்றியம் வளர்ச்சிப் பாதையில் முன்மாதிரி ஒன்றியமாக திகழ வேண்டும். மக்களின் தேவைகளை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கேட்டறிந்து சாலை வசதி குடிநீர் வசதி சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என உள்ளாட்சி பிரதிநிதிகளை கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் , கிராம நிர்வாக அலுவலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Nov 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  2. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  3. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  4. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  5. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  6. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  7. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 318.30 மி.மீ மழை பதிவு