நாளை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் மக்களுக்கு பரிசு மழை

நாளை கொரோனா தடுப்பூசி  செலுத்தி கொள்ளும் மக்களுக்கு பரிசு மழை
X

பரிசு குறித்த அறிவிப்பு

நாளை சிறப்பு தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் நாளை நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்களின் பெயர்களை ஊராட்சி ஒன்றிய அளவில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு சைக்கிள், மிக்ஸி, குக்கர், சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய அளவில் 45 கிராம ஊராட்சிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர், கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஒன்றிய குழுத்தலைவர், கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!