கீழ்பெண்ணாத்தூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா
திருவண்ணாமலைஅடுத்த கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் உள்ள சு.பொலக்குணம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் சு.பொலக்குணம் கிராமத்தில் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. வருடந்தோறும் ஆடிவெள்ளியன்று பக்தர் மார்பில் உரல் வைத்து இடித்து தரப்படும் பிரசாதம் குழந்தை பேறு கிடைக்கும், நோய் நொடி நீங்கும் என்பதால் இக்கோயில் பொதுமக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றதாக விளங்கி வருகிறது. மேலும் இக்கோயில் சுற்றுப்புறபகுதி மக்களின் குலதெய்வமாகவும் விளங்கி வருகிறது.
இக்கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் அனுக்கயை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், முதல்கால யாக வேள்வி ஆகியவையும், நேற்று கோ பூஜை, இரண்டாம் கால யாகவேள்வி ஆகியவை நடந்தது. இதை தொடர்ந்து பூர்ணாஹூதி, தீபாராதனை, கடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றது. காலை 10 மணிக்கு மூலவரான முத்து மாரியம்மன், விநாயகர், முருகர் ஆகிய சுவாமி சிலைகளின் மீது சிவாச்சாரியார்கள் கண்ணன், சுரேஷ்சிவம் ஆகியோர் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சுவாமி பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை முத்துமாரியம்மன் கோயில் நிர்வாகி முருகன்சாமி, சு.பொலக்குணம் கிராம நிர்வாக அலுவலர் விக்ரம், ஊராட்சி மன்றத் தலைவர் குப்புஜெயக்குமார், துணைத் தலைவர் உமாதங்கராஜ் மற்றும் விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று இரவு முத்து மாரியம்மன் திருவீதி உலா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu