/* */

கீழ்பென்னாத்தூர்: பல்நோக்கு கட்டிடங்களை திறந்து வைத்தார் துணை சபாநாயகர்

கீழ்பென்னாத்தூர்: 8 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடங்களை துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

கீழ்பென்னாத்தூர்: பல்நோக்கு கட்டிடங்களை  திறந்து வைத்தார் துணை சபாநாயகர்
X

புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டிடங்களை துணை சபாநாயகர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் ரூபாய் 8 லட்சத்தில் பல்நோக்கு கட்டிடங்களை நேற்று மாலை துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்தார்.

கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கருங்காலி குப்பம், ராஜா தோப்பு ஆகிய பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8 லட்சம் மதிப்பில் 3 கட்டிடங்கள் கட்டப்பட்டது. அதன்படி கருங்காலி குப்பம் கிராமத்தில் ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்துவைத்தார்.

தொடர்ந்து கருங்காலி குப்பம் குளக்கரையில் ரூபாய் 2 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட காரியம் மேடையை பார்வையிட்டார். ராஜா தூக்கு பகுதியில் ரூபாய் 3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளில் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், பேரூராட்சி தலைவர்கள், வருவாய் அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Jan 2022 1:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. திருவள்ளூர்
    தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து...
  3. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...
  4. உசிலம்பட்டி
    மதுரை அருகே ,வயலில் சாக்கடை நீர் கலப்பா? பொதுமக்கள் ஆவேசம்!
  5. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  6. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  7. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  8. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
  9. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்