திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா் வட்டங்களில் 2ம் நாளாக ஜமாபந்தி
கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
Jamabandi Petition Status - கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், சோமாசிபாடி வருவாய் உள்வட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி பங்கேற்று பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 140 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்
இதில், வட்டாட்சியா் சக்கரை, சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் பன்னீா்செல்வம், மண்டல துணை வட்டாட்சியா் வேணுகோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சோமாசிபாடி வருவாய் உள் வட்டத்தை சேர்ந்த 25 கிராமங்களுக்கான கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. அதில் பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வீடு அளவை, நிலஅளவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து 140 மனுக்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார் வேணுகோபால், தலைமையிட துணை தாசில்தார் அப்துல்ரவூப், வட்ட வழங்கல் அலுவலர் மஞ்சுநாதன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் மாலதி, தலைமையிட சர்வேயர் சாகுல்அமீது, துணை சர்வேயர் முனியன், வருவாய் ஆய்வாளர்கள் மகாலட்சுமி (சோமாசிபாடி), சுதா (கீழ்பென்னாத்தூர்), அல்லி (வேட்டவலம்) மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் நேற்று தேவிகாபுரம் பிர்க்காவை சேர்ந்த 12 கிராமங்களுக்கான ஜமாபந்தி நடந்தது. அதில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கப்பட்டன.
ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட தனித்துணை ஆட்சியா் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தாசில்தார் கோவிந்தராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேவிகாபுரம் வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.
ஜமாபந்தியில் முருகமங்கலம், தேவிகாபுரம், ஓதலவாடி, தும்பூர், மதுரைபெரும்பட்டூர், மன்சூராபாத், ஆத்துரை உள்பட 12 கிராம மக்களிடம் இருந்து மொத்தம் 138 மனுக்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
செங்கம் தாலுகா அலுவலகத்தில் நேற்று 2-வது நாளாக நடந்த ஜமாபந்தியில் பாய்ச்சல் உள்வட்டத்திற்கு உட்பட்ட கிராம பகுதி மக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியர் வெற்றிவேலிடம் வழங்கினர். இதில் பொதுமக்களிடம் இருந்து 420 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதாக வருவாய்த்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இதில் வட்டாட்சியர்கள் முனுசாமி, ரேணுகா, வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ், துணை தாசில்தார் தமிழ்செல்வி, வருவாய் ஆய்வாளர்கள் அமுதா, சரண்ராஜ், நீலகண்டன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் விஜயகுமார், குணாநிதி, சந்திரகுமார், திருமால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் கேட்டவரம்பாளையம் கிராம பகுதி பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆர்டிஓ கவிதா, கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். வட்டாட்சியர் தக்ஷிணாமூர்த்தி, தனி தாசில்தார் மலர்கொடி, துணை வட்டாட்சியர் சாரதா மற்றும் அலுவலக ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu