திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் தீவிர பிரச்சாரம்

திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் தீவிர பிரச்சாரம்
X

திமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய அமைச்சர் வேலு,உடன் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி

கீழ்பெண்ணாத்தூரில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் வேலு, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பேருந்து நிலையம் மற்றும் துரிஞ்சாபுரம் ஒன்றியம் நாயுடு மங்கலத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளர் அண்ணாதுரை ஆதரித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உதயசூரியன் சின்னத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி தலைமை தாங்கினார். மாநில மருத்துவர் அணி துணை தலைவர் எ.வ.வே.கம்பன், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம், மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது;

திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்கு அவர்கள் இல்லம் தேடி பல திட்டங்கள் செல்கிறது .அதேபோல் திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாம் மக்கள் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேற்றி கொடுக்கப்படுகிறது. திமுக ஆட்சி மக்களின் ஆட்சி, இதை நாம் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும் . உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக குடும்ப அட்டைக்கு நான்காயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என கையெழுத்திட்டார். அதனைத் தொடர்ந்து விடியல் பயண திட்டம், புதுமைப்பெண் திட்டம் என பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்தார்.

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் பல வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது .அதில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகங்கள், ரேஷன் கடைகள் ,அங்கன்வாடி மையங்கள், பள்ளி கட்டிடங்கள், புதிய தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலை வசதிகள், பயனியர் நிழற்குடை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் அனைத்தும் திமுக ஆட்சியில் தான் நடைபெற்று வருகிறது.

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் ரூபாய் 65 கோடிக்கு மேற்பட்ட நிதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது அதில் நாயுடு மங்கலம் பகுதியில் ரூபாய் 17 லட்சத்தில் குடிநீர் பராமரிப்பு திட்டத்தில் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நாயுடு மங்கல பகுதியில் ரூபாய் 60 லட்சத்தில் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.

மேலும் மகளிர் குழுக்களுக்கு வட்டி இல்லா கடன் ரூபாய் ஒரு லட்சம் வழங்க உள்ளது. மாணவர்கள் படிப்பதற்கு வட்டி இல்லா கடன் உதவி ரூபாய் 4 லட்சம் வழங்க இருக்கிறது. மேலும் 100 நாள் திட்டத்தில் 100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தி அதன் ஊதியம் ரூபாய் 400 ஆக உயர்த்தி வழங்க இருக்கிறது.

சிலிண்டர் ரூபாய் 500 க்கு வழங்க இருக்கிறது. இத்தனை திட்டங்களும் சலுகைகளும் திமுக கூட்டணியாக உள்ள இந்தியா கூட்டணி கட்சிக்கு முழு ஆதரவளித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து திமுக வேட்பாளர் அண்ணாதுரை வெற்றி பெற ஆதரியுங்கள் என அமைச்சர் வேலு பேசினார்.

நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்டத் துணை அமைப்பாளர்கள், அணி அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் , கூட்டணி கட்சி நிர்வாகிகள், திமுக தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு