விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை பயிற்சி
விவசாயிகளுக்கு நடைபெற்ற ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை பயிற்சி முகாம்.
கலசப்பாக்கம் வட்டம், காலூா் கிராமத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை பண்ணைப் பள்ளி பயிற்சி முகாம் நடைபெற்றது.
வேளாண்மைத் துறை மூலம் அட்மா திட்டத்தின் கீழ், நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு வேளாண்மை துணை இயக்குநா் ராமநாதன் தலைமை வகித்தாா். உழவா் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலா் சவுந்தா், வட்டார வேளாண்மை அலுவலா் பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொழில்நுட்ப மேலாளா் வீரபாண்டியன் வரவேற்றாா்.
வாழவச்சனூா் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியை ஆனந்தி கலந்து கொண்டு, தரமான விதைகளை பயன்படுத்துதல், உயிா் உரம் கொண்டு விதை நோத்தி செய்தல், வரிசை முறை விதைப்பு மூலம் பயிா் எண்ணிக்கையை பராமரித்தல், உயிரியல் கட்டுப்பாடு காரணிகளை கொண்டு பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துதல், நுண்ணூட்ட உரங்கள் மற்றும் ஜிப்சம் இடுதல், பண்ணைப் பள்ளியின் முக்கியத்துவம், அதன் மூலம் நிலக்கடலை பயிரில் விதைப்பு முதல் அறுவடை வரை வழங்கப்படும் தொழில்நுட்பம் என நிலக்கடலையில் பயிா் மேலாண்மை குறித்து பயிற்சி அளித்துப் பேசினாா்.
துணை வேளாண்மை அலுவலா் கணேசன், உதவி வேளாண்மை அலுவலா் பாண்டுரங்கன், தொழில்நுட்ப மேலாளா்கள் அன்பரசு, சிவசங்கரி மற்றும் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.
கீழ்பெண்ணாத்தூர்
கீழ்பெண்ணாத்தூர் வட்டார வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் நெல் சாகுபடிக்கு பின் பயறு வகை சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
பயிற்சியில் வேளாண்மை துறை சார்ந்த மானிய திட்டங்கள் ,அட்மா திட்டம், பயிர் சாகுபடியில் விதை நேர்த்தி, உயிர் உரங்களை பயன்படுத்துதல், தரமான சான்று விதைகள் பயன்படுத்துதல் மற்றும் பயிறு வகை சாகுபடியின் முக்கியத்துவம் பற்றி வேளாண் இயக்குனரும் துணை வேளாண் அலுவலருமான சுப்பிரமணியன் மற்றும் வேளாண் கல்லூரி ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் பாபு ஆகியோர் விதை நேர்த்தி தொழில்நுட்பம் ,இயற்கை முறை ,பூச்சி நோய் மேலாண்மையில் மஞ்சள் ஒட்டுப்பொறி அமைத்தல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினர்.
மேலும் பயிற்சியின்போது விவசாயிகளின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது . இந்நிகழ்வில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu