கீழ்பென்னாத்தூர் காவல்நிலையத்தில் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட எஸ்பி கார்த்திகேயன்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலையத்தில் திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் திடீர் ஆய்வு நடத்தினார்.
கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலையத்தில் இரவு 7 மணி அளவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் வருகை தந்தார். அப்போது அவர் காவல் நிலையம் முன்பாக எதிர்ப்புறம் உள்ள சாலையின் ஓரமும் எந்தவித வாகனங்களையும் நிறுத்த அனுமதிக்க கூடாது என்றும் மனுதாரர்கள் புகார் கொடுக்க காவல் நிலையத்தில் நேரடியாக அணுக வேண்டும் என்றும் இதில் இடைத்து தரகர்களை தலையிட அனுமதிக்க கூடாது என்றும் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசியிடம் அறிவுரை வழங்கினார்.
மேலும் கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் கள்ள சாராயம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள், காவல் நிலைய ஆய்வாளர்கள் ,காவலர்கள் உடனிருந்தனர்.
உலக குழந்தைகள் புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி
திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு திருவண்ணாமலை லயன் சங்கம் சார்பில் உலக குழந்தைகள் புற்றுநோய் தினத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் சிவனு பாண்டியன் , துவக்கி . இந்த விழிப்புணர்வு பேரணி வேங்கிகால் போளூர் சாலை வழியாக அண்ணா நுழைவாயிலை வந்தடைந்தது.
அங்கு மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பதாகைகள் ஏந்தி குழந்தைகள் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுடைய ஏற்படுத்தினர்.
பேரணியில் திருவண்ணாமலை மாவட்ட லயன்ஸ் சங்க இந்நாள் முன்னாள் ஆளுநர்கள் , லயன்ஸ் சங்க நிர்வாகிகள், தனியார் கல்லூரி நிர்வாகிகள், மாணவ மாணவிகள் ,மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu