திருவண்ணாமலை மாவட்டத்தில் பேரூராட்சிகளின் இயக்குனர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பேரூராட்சிகளின் இயக்குனர் ஆய்வு
X

புதிய கிணறு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்ட  பேரூராட்சிகளின் இயக்குநர்,மாவட்ட ஆட்சியா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பணிகளை பேரூராட்சிகளின் இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி வேட்டவலம் பேரூராட்சியில் ரூ.19.89 கோடியில் நடைபெற்று வரும் புதிய குடிநீா் கிணறு அமைக்கும் பணியை தமிழக அரசின் பேரூராட்சிகளின் இயக்குநா் கிரண் குராலா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வேட்டவலம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் கழிவுகள், குப்பைகள் தூய்மைப் பணியாளா்கள் மூலம் தரம் பிரிக்கப்படுகிறது. தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள் வள மீட்பு பூங்காவில் உலா் கழிவுகள் செயலாக்கக் கட்டமைப்புப் பணிகள் மூலம் உரமாக மாற்றப்படுகிறது. இதேபோல, வேட்டவலம், பெரிய ஏரி பகுதியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ், ரூ.19 கோடியே 89 லட்சத்தில் பொதுமக்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் புதிய கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை தமிழக அரசின் பேரூராட்சிகளின் இயக்குநா் கிரண் குராலா, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அப்போது, கழிவுகள் மற்றும் குப்பைகளைப் பிரிக்கும் முறை, உரம் தயாரிக்கும் முறைகள் குறித்து தூய்மைப் பணியாளா்களிடம் அதிகாரிகள் கேட்டறிந்தனா். மேலும், புதிய குடிநீா் அமைக்கும் பணியை தரமாகவும், குறித்த காலத்துக்குள் செய்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று துறை அலுவலா்கள், ஒப்பந்ததாரருக்கு பேரூராட்சிகளின் இயக்குநா் கிரண் குராலா உத்தரவிட்டாா்.

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி களம்பூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் நடை பெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளான, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.17.98 கோடி மதிப்பில் 5 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள், 4 கிணறுகள், பைப் லைன் அமைத்தல், ரூ.1.79 கோடியில் சமுதாயக் கூடம், சாலை மற்றும் பக்க கால்வாய் அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.3.77 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை சென்னை பேரூராட்சிகளின் இயக்குனர் கிரன்குராலா அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் நடைபெற்று வரும் மக்கும், மக்கா குப்பைகள் தயாரித்தல், இயற்கை உரம் தயாரித்தல், பொது சுகாதாரப் பணிகள், குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார். பின்னர், வார்டுகளில் குடிநீர் முறையாக வழங்கப்படுகிறதா? பொதுகழிப்பறைகள் சுத்துமாக உள்ளதா? வார்டுகளில் குப்பைகள் முழுமையாக அகற்றப்டுகிறதா என நேரில் சென்று பார்வையிட்டார்.

ஆய்வின்போது, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஞானசுந்தரம், வேலூா் மண்டல உதவி செயற்பொறியாளா்கள் அம்சா, செங்குட்டுவன் மற்றும் கவுன்சிலர்கள், அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!