சோமாசிபாடியில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய துணை சபாநாயகர் பிச்சாண்டி.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சோமாசிபாடியில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பொது மேலாளர் அமரவாணி தலைமை தாங்கினார்.
மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம், ஆலோசனை குழு தலைவர் சிவக்குமார் , ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை ஆவின் விரிவாக்க அலுவலர் சரவணன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு சங்க உறுப்பினர்கள் 708 பேருக்கு ரூபாய் 7,21,000 மூக்க தொகைகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்
இச்சங்கத்தில் உள்ள பால் குளிரூட்டும் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 6000 லிட்டர் பால் குளிரூட்டப்பட்டு சென்னை அம்பத்தூர் மாதவரம் போன்ற பால் பண்ணைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
தற்போது கூடுதலாக பால் குளிரூட்டும் நிலையம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது இதனை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படும் எனக் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ஹரிபாலன், ஆரஞ்சு ஊராட்சி மன்ற தலைவர் விஜயா சேகர், மணிகண்டன் , ஏரி நீர் பாசன சங்கத் தலைவர் குணசேகரன், திமுக நிர்வாகிகள் , கூட்டுறவு பால் சங்க நிர்வாகிகள் , உறுப்பினர்கள் , விரிவாக்க அலுவலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சியில் உள்ள சாலையின் இடையில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகளை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu