புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிடம் திறப்பு

புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிடம் திறப்பு
X

வேளாண் விரிவாக்க மையத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்த  மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம்.

புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் ரூபாய் 2 கோடி 65 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வை தொடர்ந்து கீழ்பெண்ணாத்தூரில் நடைபெற்ற விழாவிற்கு திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் அரிக்குமார், தலைமை தாங்கினார். வேளாண்மை துணை இயக்குனர் ஏழுமலை, நகர திமுக செயலாளர் அன்பு , அட்மா ஆலோசனைக் குழு தலைவர் சோமாசிபாடி சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கீழ்பெண்ணாத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகன் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றி விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

விழாவில் வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் பஞ்சாபிகேசன், உதவி செயற்பொறியாளர் சண்முகநாதன், கிருஷ்ணன், இளநிலை பொறியாளர் சாந்தகுமார், வேளாண்மை இயக்குனர் சரவணன், தமிழக விவசாயிகள் சங்கம் தலைவர் வேட்டவலம் மணிகண்டன், தோட்ட கலைத்துறை உதவி இயக்குனர் சேவியர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், பாக்கியலட்சுமி, லோகநாதன், பேரூராட்சி தலைவர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் குப்புசாமி, விஜயா சேகர், வேளாண்மை துறை அலுவலர் சுப்பிரமணியன், வட்டார தொழில் நுட்ப மேலாளர் சங்கீதா மற்றும் முன்னோடி விவசாயிகள், இயற்கை வேளாண்மை விவசாயிகள், வேளாண்மை துறை அதிகாரிகள், வட்டார தொழில் நுட்ப செயற்பொறியாளர்கள், கீழ்பெண்ணாத்தூர் ஒன்றிய கவுன்சிலர்கள், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Next Story
கோபி பாரியூரில் குண்டம் திருவிழா..! பக்தர்களின் உற்சாக பார்வையில் கடவுளின் அருளுடன்..!