கீழ்பெண்ணாத்தூரில் சீரமைக்கப்பட்ட சமுதாயக்கூடம் திறப்பு

கீழ்பெண்ணாத்தூரில் சீரமைக்கப்பட்ட சமுதாயக்கூடம் திறப்பு
X

சமுதாயக்கூடத்தை திறந்து வைத்த துணை சபாநாயகர்

கீழ்பெண்ணாத்தூரில் சீரமைக்கப்பட்ட சமுதாயக்கூடம் துணை சபாநாயகர் திறந்து வைத்தார்.

கீழ்பெண்ணாத்தூரில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட சமுதாயக்கூடத்தை துணை சபாநாயகர் பிச்சாண்டி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் குளக்கரை பகுதியில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாயக்கூடம் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது. இந்த கட்டிடத்தை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

இவ்விழாவில் நகர திமுக செயலாளர் அன்பு, மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம், பேரூராட்சி தலைவர் சரவணன் ,துணைத்தலைவர் தமிழரசி ,செயல் அலுவலர் சுகந்தி, பேரூராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்ட செயலாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய குழு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்தில் 200 அதிமுகவினர் விலகல்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவரும் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான பிச்சாண்டி அனைவரையும் வரவேற்றார்.

ஊராட்சி மன்ற தலைவர் சத்யா மூர்த்தி, தலைமையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேந்தன், முன்னாள் கிளைச் செயலாளர் உட்பட 200 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அத்தாட்சியில் இருந்து விலகி பொதுப்பணித்துறை அமைச்சரும் திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளர் எ. வ. வேலு, முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

திமுகவில் இணைந்த அனைவருக்கும் அமைச்சர் கைத்தறி ஆடை அணிவித்து வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ. வ.வே. கம்பன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்டத் துணைச் செயலாளர் பிரியா விஜய ரங்கன், திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட அமைப்பாளர்கள், கீழ்பெண்ணாத்தூர் ஒன்றிய திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்