கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதியில் பயணியர் நிழற்குடை திறப்பு

கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற  தொகுதியில் பயணியர் நிழற்குடை திறப்பு
X

பயணியர் நிழற்குடையினை திறந்து வைத்த துணை சபாநாயகர் பிச்சாண்டி.

கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதியில் பயணியர் நிழற்குடையை துணை சபாநாயகர் திறந்து வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றியம் கமல புத்தூர் புதிய காலனியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை, மக்களின் பயன்பாட்டிற்காக தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்தார்.

பின்னர் ஐந்து வகுப்பறை கொண்ட புதிய பள்ளி கட்டிடத்தை துவங்குவதற்கான இடத்தை துணை சபாநாயகர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள மல்லவாடி ஊராட்சியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய ஐந்து வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடத்தை கட்டுவதற்கு துணை சபாநாயகர் பிச்சாண்டி இடத்தை தேர்வு செய்து பேசியதாவது:-

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள மல்லவாடி ஊராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய ஐந்து வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு இடத்தை ஆய்வு செய்த அந்த இடம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சொந்தமான இடம்.

இந்த இடத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு கொடுத்து, அதன் மூலம் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நபார்டு வங்கி கடன் உதவி மூலம் ஐந்து வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடத்தை கட்டுவதற்கு இடத்தை தேர்வு செய்து இந்த பள்ளி கட்டிடத்தின் மூலம் மாணவர்கள் போதுமான இடவசதியுடன் சிறப்பான முறையில் படிக்க வேண்டும் என்பதற்காகவும்,

மற்றும் மாணவர்களுக்கு படிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அமைத்துக் கொடுத்து அதன் மூலம் மாணவர்கள் படிப்பதற்கு அங்கும் இங்கும் அலையாமல் துரிஞ்சாபுரம் யூனியனில் உள்ள இந்த உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் நல்ல முறையில் படித்து பெரிய அளவில் சாதிக்க வேண்டும் . அதன் மூலம் நமது ஒன்றியத்துக்கும், நமது மாவட்டத்திற்கும், நமது மாநிலத்திற்கும், நல்ல ஒரு பெயரை உருவாக்கி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி இராமஜெயம், ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
அட இது தெரியமா போச்சே !!ஆரஞ்சு பழம் , கடல் உணவுல தைராய்டு பிரச்சனைய சரி பண்ணிரலாமா !!! | Superfoods that will help in managing thyroid levels in tamil