பகுதி நேர நியாய விலைக்கடை திறப்பு விழா: துணை சபாநாயகர் பங்கேற்பு

பகுதி நேர நியாய விலைக்கடை திறப்பு விழா: துணை சபாநாயகர் பங்கேற்பு
X

குத்துவிளக்கேற்றி நியாய விலை கடைகளை  திறந்து வைத்த  துணை சபாநாயகர் 

கீழ்பெண்ணாத்தூரில் நியாய விலை கடைகளை துணை சபாநாயகர் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த காா்ணாம்பூண்டி கிராமம், காமராஜா் நகரில் புதிதாக பகுதி நேர நியாய விலைக்கடை திறப்பு விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ஆராஞ்சி ஆறுமுகம் தலைமை வகித்தாா்.

கூட்டுறவு சாா் -பதிவாளா் சரவணன், வட்ட வழங்கல் அலுவலா் சீனுவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சித் தலைவா் பாபு வரவேற்றாா்.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பகுதிநேர நியாய விலைக் கடையை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கினாா்.

பின்னா் துணை சபாநாயகர் பேசியதாவது:

இந்தியாவிலேயே முதன்முதலில் திமுக ஆட்சியில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியை வழங்கியவா் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி. தமிழகம் முழுவதும் கிராமங்களில் உள்ள கூரை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றி கட்டித் தரும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்போதைய திமுக அரசு பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும் முன்னுரிமை அளித்து பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் கல்வி திட்டம், கலைஞர் உரிமைத் தொகை திட்டம், கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டம் என தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை தமிழகம் முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகிறார் என துணை சபாநாயகர் பேசினார். தொடா்ந்து, பொதுமக்களுக்கு கு.பிச்சாண்டி இனிப்பு வழங்கினாா்.

விழாவில், ஊராட்சி துணைத் தலைவா் திருவேங்கடம், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் வெங்கடேசன், இளங்கோ, சிறுநாத்தூா் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலா் பச்சையப்பன், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் நியாய விலை கடை அலுவலர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!