கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையத்தில் புதிய ஆவின் பாலகம் திறப்பு விழா

கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையத்தில் புதிய ஆவின் பாலகம் திறப்பு விழா
X

புதிய ஆவின் பாலகத்தை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையத்தில் புதிய ஆவின் பாலகத்தை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார்.

கீழ்பென்னாத்தூர் பஸ்நிலையத்தில் புதிய ஆவின் பாலகம் திறப்பு விழா நடைபெற்றது. நகர செயலாளர் அன்பு தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர் சரவணன், துணைத் தலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் (ஆவின்) பொதுமேலாளர் ராஜாகுமார் வரவேற்றார். துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு புதிய ஆவின் பாலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி, ஆவின் பொருட்கள் விற்பனையை தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட ஆவின் விற்பனை மேலாளர் ஞானசேகரன், மாவட்ட விற்பனை அலுவலர் நரசிம்மன், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் கருணாநிதி, உள்பட பலரும் கலந்து கொண்டனர். நகர இலக்கிய அணி தலைவரும், ஆவின் முகவரான பன்னீர் நன்றி கூறினார்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!