கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்தில் 25 இடங்களில் உயர்மின் கோபுர விளக்குகள் அமைப்பு
25 இடங்களில் உயர்மின்கோபுர விளக்குகளை துணை சபாநாயகர் தொடங்கி வைத்தார்.
Street Light Project -கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் 2022-2023ம் ஆண்டிற்கான நமக்கு நாமே திட்டத்தின் கீழ், கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆராஞ்சி, கடம்பை, ஐங்குணம், கானலாபாடி, கழிக்குளம், கனபாபுரம்-ரெட்டியாபாளையம், வழுதலங்குணம், கீக்களூர், கல்பூண்டி, சிறுநாத்தூர், நாரியமங்கலம் வேடநத்தம், கரிக்கலாம்பாடி, சாணிப்பூண்டி உள்பட 23 ஊராட்சிகளில் 25 இடங்களில் தலா ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் உயர்மின்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டன.
அந்தந்த இடங்களில் நடந்த நிகழ்ச்சியில் உயர்மின்கோபுர விளக்குகளை துணை சபாநாயகர் பிச்சாண்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றிய சேர்மன் அய்யாக்கண்ணு, துணை சேர்மன் வாசுகி ஆறுமுகம், ஒன்றிய ஆணையாளர் அருணாசலம், ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், அட்மா ஆலோசனை குழு தலைவர் சிவக்குமார், மற்றும் அந்தந்த பகுதி ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள மற்றும் திமுக., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu