திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா
X

திருவண்ணாமலையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது.

திருவண்ணாமலை சின்னக் கடை தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் மூலவருக்கு நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து மகாதீபாரதனை காட்டப்பட்டது. பின்னர் மதியம் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

இரவு திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அய்யங்குல கரையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுடன் இணைந்த 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சஞ்சீவி ராயர் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்தக் கோயில் அண்ணாமலையார் கோயிலுடன் இணைந்த கோயிலாகும். அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு. பின்னர் வெற்றிலை மாலை. வட மாலை. துளசி மாலை சாற்றப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது.

பின்னர் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சிநேயரை வழிபட்டனர்.

கீழ்பெண்ணாத்தூர்

கீழ்பெண்ணாத்தூரில் மின்வாரிய அலுவலக முகப்பில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் 32 வது அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது.

காலை மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் துளசி மாலை, வெற்றிலை மாலை, வடை மாலை அணிவிக்கப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் மின்வாரிய அதிகாரிகள் ,அலுவலர்கள், ஊழியர்கள், பக்தர்கள், என பலர் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்.

வேட்டவலம்

வேட்டவலம் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. வேட்டவலம் சிவன் கோவில் தெருவில் அமைந்துள்ள ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. காலை சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம் ,இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு வடை மாலை, ஜாங்கிரி மாலை, துளசி மாலை, எலுமிச்சை மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் காட்சியளித்தார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நேற்று இரவு எட்டு மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வேட்டவலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!