அகல்திறன் மேம்பாட்டு மையம் சார்பில் பட்டமளிப்பு விழா

அகல்திறன் மேம்பாட்டு மையம் சார்பில் பட்டமளிப்பு விழா
X

பயிற்சி முடித்த மாணவ மாணவிகளுக்கு தையல் மெஷின், கணினி இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

6-மாத காலம் பயிற்சி முடிந்தது தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

கீழ்பென்னாத்தூர் அகல்திறன் மேம்பாட்டு மையம் சார்பில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மேற்படிப்பு கல்வியை தொடர முடியாமல் உள்ள இளைஞர்கள் மற்றும் மகளிர்களுக்கு சுய வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில், தேசிய திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் கீழ்பென்னாத்தூர் அகல் திறன் மேம்பாட்டு மையத்தில் தையல் பயிற்சி மற்றும் கணினி பயிற்சி கற்றுதருகின்றனர்.

6-மாத காலம் பயிற்சி முடித்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் பட்டமளிப்பு விழா கீழ்பென்னாத்தூர் அகல் மையத்தில் நடந்தது. அகல் மைய இயக்குனர் மரியநாதன் தலைமை தாங்கினார். திட்ட இயக்குனர் ராயப்பன், .தொழில் கல்வி பயிற்சிஆசிரியர்கள் சுஜிதாமேரி (தையல்), உமா (கணினி) முன்னிலை வகித்தனர்.

உதவி திட்ட இயக்குனர் ஜேக்கப் அனைவரையும் வரவேற்றார். அகல் திறன் மேம்பாட்டு மையத்தில் தையல் மற்றும் கணினி பயிற்சி பெற்ற 21 பேருக்கு, சென்னை மறை மாநில வளர்ச்சி இயக்குனர் வசந்த் மற்றும் திருச்சி கிளவ்ஸ் இல்ல பொருளாளர் வெனிஷ் இணைந்து சான்றிதழ்கள் மற்றும் தையல் மெஷின், கணினி இயந்திரங்களை வழங்கி பேசினர்.

நிகழ்ச்சியில், அருட்செல்வம், தையல் பயிற்சி மற்றும் கணினி பயிற்சி பெற்ற இளைஞர்கள், மகளிர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். அகல்மைய கலைக்குழு மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!