கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு செயலாளர் கள ஆய்வு
மாணவ, மாணவியர் கற்றல் மற்றும் வாசித்தல் திறன் குறித்து கேட்டறிந்த அரசு செயலாளர் மற்றும் ஆட்சியர்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம், கலிங்கலேரி ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்பபள்ளியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர், அரசு செயலர், பள்ளிக்கல்வித்துறை மதுமதி, ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர்களின் கற்றல் மற்றும் வாசித்தல் திறன் குறித்து கேட்டறிந்தார்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், நல்லான்பிள்ளைபெற்றான் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பாக கட்டப்பட்டு, முடியும் நிலையில் உள்ள பாலத்தினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், அரசு செயலர், அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், அரசு செயலர், பள்ளிக்கல்வித்துறை மதுமதி மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் கீழ்பென்னாத்தூரில் உள்ள நெல் விதை பண்ணைக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
விவசாய பெருமக்களுக்கு தரமான நெல் விதைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் வேளாண்மை துறையின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விதைப் பண்ணைகள் அமைத்து தரமான நெல் மணிகளை சாகுபடி செய்து அதனை 50% மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் சொர்ணவரி நெல் பயிர் விதை பண்ணைக்கான இலக்கு 200 ஹெக்டர் என்று நிர்ணயம் செய்யப்பட்டு தற்போது வரை 131.1 ஹெக்டர் இலக்கை அடைந்துள்ளது. இதில், திருவண்ணாமலை வட்டாரத்தில் 12 ஹெக்டருக்கு துரிஞ்சாபுரம் வட்டாரத்தில் 1.2 ஹெக்டரும், கீழ்பென்னாத்தூர் வட்டாரத்தில் 1.6 ஹெக்டரும், தண்டராம்பட்டு வட்டாரத்தில் 6.8 ஹெக்டரும். புதுப்பாளையம் வட்டாரத்தில் 3.2 ஹெக்டரும். கலசப்பாக்கம் வட்டாரத்தில் 15 ஹெக்டரும், போளுர் வட்டாரத்தில் 10 ஹெக்டரும். சேத்துப்பட்டு வட்டாரத்தில் 3 ஹெக்டரும், ஆரணி வட்டாரத்தில் 8.6 ஹெக்டரும், மேற்கு ஆரணி வட்டாரத்தில் 6.5 ஹெக்டரும், வந்தவாசி வட்டாரத்தில் 2.8 ஹெக்டரும், தெள்ளார் வட்டாரத்தில் 1.6 ஹெக்டரும், பெரணமல்லூர் வட்டாரத்தில் 6.4 ஹெக்டரும், செய்யார் வட்டாரத்தில் 8 ஹெக்டரும், அனக்காவூர் வட்டாரத்தில் 15.2 ஹெக்டரும். வெம்பாக்கம் வட்டாரத்தில் 5.1 ஹெக்டர் என மொத்தம் நமது மாவட்டத்தில் 131.1 ஹெக்டர் இலக்கை அடைந்துள்ளது.
நமது மாவட்டத்தில் ADT 37. COSS, ADT 53, COSI மற்றும் ADT 45 ஆகிய நெல் ரகங்கள் நெல் விதைப்பெறுக்குத் திட்டத்தின் கீழ் நெல் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டு சாகுபடி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கீழ்பெண்ணாத்தூரில் நெல் பெருக்கு திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் பரப்பளவில் ஊழு. 55 ரக நெல் விதை பண்ணை அமைத்து நெல் மணிகளை சாகுபடி செய்யும் விவசாயி சந்திரா மற்றும் கேசவன் என்பவரது நிலத்தில் ஆய்வு மேற்கொண்டு, நெல் பராமரிப்பு, எவ்வளவு காலத்தில் சாகுபடி செய்யப்படும் என்றும் பயன்படுத்தப்படும் உரம் குறித்தும், மானியம் மற்றும் வேளாண்மை துறையின் பங்களிப்புகள் குறித்த விவரங்களை விவசாயிகளிடம் கேட்டறிந்து கள ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அதிகாரிகள் ,அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu