புதிய சத்துணவு கூடம், நியாய விலை கடைகள், அங்கன்வாடி மைய கட்டிடங்கள் திறப்பு..!

புதிய சத்துணவு கூடம், நியாய விலை கடைகள், அங்கன்வாடி மைய கட்டிடங்கள் திறப்பு..!
X

புதிய சத்துணவு கூடத்தை திறந்து வைத்த துணை சபாநாயகர்

கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் சத்துணவு கூடக் கட்டிடம், நியாயவிலை கடைகள், அங்கன்வாடி மையக்கட்டிடங்களை துணை சபாநாயகர் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்தில் புதிய ரேஷன் கடைகள், கால்நடை நிலையம், பயணிகள் நிழற்குடை ஆகியவற்றை துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்தார்.

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியைச் சேர்ந்த சோமாசிபாடி ஊராட்சி, கடம்பை ஊராட்சி, சிறு குளத்தூர் ஊராட்சி, ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடங்கள், வேடநத்தம் கிராமத்தில் புதிய காத்திருப்போர் கூடம் மற்றும் கால்நடை கிளை நிலையம், அங்கன்வாடி கட்டிடம் மற்றும் சத்துணவு சமையலறை கட்டிடங்கள், கனியாம் பூண்டியில் நிழற்குடை ஆகியவற்றை துணை சபாநாயகர் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த காட்டுமலையனூர் ஊராட்சியில் உள்ள கெங்கனந்தல் கிராமப் பகுதியில் புதிய சத்துணவு கூடக் கட்டிடத்தை திறந்து வைத்தார். உடன் காட்டுமலையனூர் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாயகி அருணாச்சலம் மற்றும் கீழ்பெண்ணாத்தூர் ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு அவர்களும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் ரூபாய் 87.19 லட்சம் மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம் அங்கன்வாடி மையம் சமையலறை கட்டிடங்களை திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் யூனியனில் உள்ள தேவனாம்பட்டு புதுமல்லவாடி பழைய மல்லவாடி துர்காபுரம் பாலானந்தல் வேடந்தவாடி வட ஆண்டாப்பட்டு ஆகிய ஊராட்சிகளில் புதிய பள்ளி கட்டிடம் அங்கன்வாடி மைய கட்டிடம் சமையலறை கட்டிடம் ரேஷன் கடை கட்டிடம் கால்நடை துணை சுகாதார நிலைய கட்டிடங்களை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன். முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது :-

திமுக ஆட்சி மக்களின் ஆட்சி ,மக்கள் பணியை செய்வதற்கு தமிழக முதல்வரும் அமைச்சர்களும் நாங்களும் தயாராக உள்ளோம். சென்ற ஆண்டு மக்களிடம் பஞ்சாயத்து தலைவர் மற்றும் கவுன்சிலர்களிடமும் தங்களின் கோரிக்கைகளை கேட்டபோது , அவர்கள் ஊராட்சியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் ,அங்கன்வாடி மையக் கட்டிடம், சமையலறை கட்டிடம், நூலகம், பள்ளி கட்டிடம் ஆகியவை வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மக்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் வளர்ச்சி பணிகள் அனைத்தும் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்றது. அதன் மூலம் பணிகளை விரைந்து முடித்து இப்போது பயன்பாட்டிற்கு துவக்கப்பட்டுள்ளது.

மேலும் பல வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த கட்டடங்களும் பணிகள் முடிக்கப்பட்டு துவக்கப்படும். மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் செய்து கொடுப்பதுதான் இந்த திராவிட மாடல் ஆட்சி.

மேலும் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் மக்களுக்கு தேவையான வளர்ச்சி பணிகள் வேண்டுமென்றால் எந்த நேரத்திலும் எங்களிடம் தொடர்புக்கு கொண்டு உங்கள் வளர்ச்சி பணிகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் ,உங்கள் வளர்ச்சி பணிகளை செய்வதற்கு நாங்கள் என்றென்றும் தயாராக உள்ளோம் என பேசினார்.

நிகழ்ச்சியில் பொது விநியோகத் திட்ட அலுவலர்கள், கூட்டுறவுத்துறை சார் பதிவாளர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் ,பஞ்சாயத்து தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு