போலீஸ் ஜீப் மீது அரசு பேருந்து மோதல்: காவல் அதிகாரி உயிரிழப்பு

போலீஸ் ஜீப் மீது அரசு பேருந்து மோதல்: காவல் அதிகாரி உயிரிழப்பு
X

விபத்து நடந்த இடத்தை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட எஸ்பி

கீழ்பெண்ணாத்தூர் அருகே போலீஸ் ஜீப் மீது அரசு பேருந்து மோதியதில் காவல்துறை அதிகாரி உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா் அருகே போலீஸ் ஜீப் மீது அரசுப் பேருந்து மோதியதில் கா்நாடக காவல்துறை அதிகாரிகள் உள்பட 3 போ் உயிரிழந்தனா், மேலும் இருவா் பலத்த காயமடைந்தனா்.

கா்நாடக மாநில சிறப்பு காவல் படையின் உதவி கமாண்டன்ட் பிரபாகரா, சிறப்பு காவல்படை அதிகாரி ஹேமந்த் , பாதுகாவலா் விட்டல் , இவா்கள் மூவரும் சேலம் மாவட்ட மக்களவைத் தோ்தல் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

தமிழக சிறப்புக் காவல் படையைச் சோ்ந்தவா்கள் தினேஷ், ஜெயக்குமாா் இவா்கள் இருவரும் சேலத்தில் பணிபுரிந்து வந்தனா். இவா்கள் 5 பேரும் சோ்ந்து வியாழக்கிழமை காலை சேலத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு காவல்துறை ஜீப்பில் சென்றனா்.

இவர்கள் சேலத்தில் இருந்து காஞ்சிபுரம் கோவிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஜிப்பை போலீஸ்காரர் தினேஷ் ஓட்டிச் சென்றுள்ளார்.

காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் நேற்று வியாழக்கிழமை மாலை சேலம் நோக்கி கீழ்பென்னாத்தூா் வழியாகச் சென்றுகொண்டிருந்தனா்.

கீழ்பென்னாத்தூா் புறவழிச் சாலை, எம்.ஜி.ஆா். நகா் சந்திப்பு பகுதியில் வந்தபோது எதிரே திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து போலீஸ் ஜீப் மீது நேருக்கு நோ் மோதியது. இதில் போலீஸ் ஜீப் அப்பளம் போல் நொறுங்கியது. பஸ்ஸின் முன்பக்கம் சேதமடைந்தது.

இந்த விபத்தில் போலீஸ் ஜீப் நொறுங்கியது. அதில் பயணம் செய்த 5 பேரும் இடிபாடுகளில் சிக்கினா். பொதுமக்கள் அவா்கள் 5 பேரையும் மீட்க முயன்றனா்.

ஆனால், கா்நாடக சிறப்பு காவல் படை உதவி கமாண்டன்ட் பிரபாகரா, போலீஸ் ஜீப்பை ஓட்டிச் சென்ற தமிழக காவலா் தினேஷ் ஆகியோா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

பலத்த காயமடைந்த விட்டல், ஹேமந்த், ஜெயக்குமாரை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இவா்களில் விட்டல் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

காவல் கண்காணிப்பாளா் ஆய்வு..

தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். இறந்த 2 பேரின் சடலங்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தாா்.

விபத்து குறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!