காதலிக்கு குட்பை, பள்ளி மாணவிக்கு காதல் வலை வீசிய இளைஞர் போக்சோவில் கைது
ஆரணியில் பயிற்சிக்கு வந்த பட்டதாரி பெண்ணை காதலித்து அவரை கைவிட்டுவிட்டு, பள்ளி மாணவிக்கு காதல் வலைவீசிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஒன்னுபுரம் ஊராட்சி விநாயகபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஆகாஷ் , இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு காவல்துறை பணியில் சேருவதற்காக வேலூர் மைதானத்தில் உடற்பயிற்சி செய்வதற்காக தினந்தோறும் சென்று வந்துள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த கல்லூரி படிப்பை முடித்துவிட்டு காவல் துறையில் பணியில் சேர்வதற்காக வேலூர் மைதானத்தில் பயிற்சிக்காக வந்த ஒரு பெண்ணுடன் ஆகாஷுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதனை யடுத்து அந்தப் பெண்ணை ஏமாற்றி பலமுறை அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நாம் வேலைக்கு சென்ற பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என ஆகாஷ் பலமுறை அந்த பெண்ணை ஏமாற்றி வந்துள்ளார்.
இதற்கிடையில் ஆகாஷ் அந்தப் பெண்ணுடன் பழகி வந்ததை மெல்ல குறைத்துக் கொண்டுள்ளார்.
அந்தப் பெண் சந்தேகமடைந்து ஆகாஷ் செயல்பாட்டை கண்காணித்துள்ளார். அப்போது அவர் பள்ளி மாணவிக்கு காதல் வலை வீசியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆய்வாளர் அல்லிராணி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து ஆகாஷை கண்காணித்தனர்.
அதில் அந்தப் பெண் கூறிய குற்றச்சாட்டுக்கள் உண்மை என தெரிய வரவே அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து இரண்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆகாஷை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
20 ஆண்டு சிறைத்தண்டனை
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தெற்குமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் . இவர் கடந்த 2020-ம் ஆண்டு 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குக்களுக்கான சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மணிகண்டனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பின்னர் அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu