தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன
X

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன

கீழ்பென்னாத்தூர் அருகே தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள நாரியமங்கலம் பஞ்சாயத்துக்குள்பட்ட கார்ணாம்பூண்டி கிராமத்தில் வசிக்கும் விவசாயி பெரியசாமி.

இவர் வளர்த்துவரும் ஆடுகளை தினமும் அருகில் உள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டி வைப்பது வழக்கம். இந்தநிலையில், நிலத்தில் கட்டி வைத்திருந்த ஆடுகளை தெரு நாய்கள் கடித்துள்ளது. இதில் அந்த இடத்திலேயே 4 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதற்கு முன்பு இதே போன்று ஆடுகள் மற்றும் கோழிகளையும் அடிக்கடி நாய்கள் கடித்து வருவதாக பொதுமக்கள் கூறினர். இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தெருநாய்களை பிடிக்க ஊராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story