5 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்

5 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்
X

மாதிரி படம் 

உயர் மின் கோபுரங்கள் அமைக்க உரிய இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் தொடர்ந்து 5வது நாளாக இன்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேட்டவலம் அடுத்த கெங்குபட்டு, கோணலூர், நாடழகானந்தல், கிராமங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி நடைபெறும் நிலங்களின் உரிமையாளர்களுக்கு போதிய இழப்பீடு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜூலை 22-ஆம் தேதி முதல் விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி விட்டு இப்பணியை செய்யுங்கள் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாரியம்மன் கோயிலில் காத்திருப்பு போராட்டத்தைத் தொடங்கினார். போராட்டம் 5-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
ai in future agriculture