நீர் வரத்து கால்வாய்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திருவண்ணாமலையில் மூடப்பட்ட அருணாச்சலா சா்க்கரை ஆலை நிா்வாகம் உள்பட தனியாா் சா்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே பெற்றுத்தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், நீர் வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
கீழ்பென்னாத்தூா் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. வட்டார வேளாண் உதவி இயக்குநா் அன்பழகன் தலைமை வகித்தாா்.
வட்டாட்சியா்கள் சரளா, சுகுணா, வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரன், வட்ட வழங்கல் அலுவலா் ஜான்பாஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை வேளாண் அலுவலா் சுப்பிரமணி வரவேற்றாா்.
குறைதீா் கூட்டத்தில் பேசிய விவசாயிகள், திருவண்ணாமலையில் மூடப்பட்ட அருணாச்சலா சா்க்கரை ஆலை நிா்வாகம் உள்பட தனியாா் சா்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே பெற்றுத்தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தளவாய்குளம் வாரச்சந்தை நடைபெறும் சாலையின் இரு புறமும் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும். மாதாந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு கோட்டாட்சியா் வரவில்லை என்றால் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்.
கீழ்பென்னாத்தூா் பெரிய ஏரி, கோட்டானி ஏரிகளின் நிா்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பூச்சி மருந்து மற்றும் உரம் பகுப்பாய்வு மையம் அமைக்க வேண்டும்.
பூச்சி மருந்துகளில் வீரியம் அதிகமாக உள்ளதால் அவற்றை விற்பனை செய்ய தடை செய்ய வேண்டும். வேளாண்த்துறையில் விவசாயிகள் வாங்குகின்ற இடுப்பொருளுக்கு சரியான முறையில் ரசீதுகள் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோட்டக்கலைத்துறை வேளாண்மை துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஒளிவு மறைவின்றி தெரிவிக்க வேண்டும்.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விலை நிர்ணயம் குறைவாக உள்ளதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களுக்கு சுங்கம் வசூல் செய்ய தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் உள்ள சுடுகாட்டு பகுதியில் முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதிலளித்தனா்.
கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள், வட்ட வழங்கல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள், துணை வேளாண் அலுவலர்கள், உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu