கீழ்பெண்ணாத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்

கீழ்பெண்ணாத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

கீழ்பெண்ணாத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கீழ்பென்னாத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூட்டம் எதிரில் விவசாயிகள் சங்கத்தில் நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு பெண்கள் உட்பட 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகள் இணைந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். கீழ்பெண்ணாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணை செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குணசேகரன், ஒன்றிய செயலாளர் கோபி, நிர்வாகிகள் பலராமன், கோதண்டராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் பொது நியாய விலை கடைகளில் தேங்காய் நிலக்கடலை எண்ணெய் விலை ஆகியவற்றை மானிய விலையில் விற்பனை செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் முழக்கங்களை எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மலேசியா பாமாயில் தமிழக ரேஷன் கடையில் விற்பனை செய்யப்படுவதால் ஆண்டுக்கு ரூபாய் 1500 கோடி வரிப்பணம் வீணாக செல்கிறது .விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் ,இது குறித்து அரசிடம் பலமுறை கோரிக்கை வைக்கும் போராட்டம் நடத்தியும் பலன் இல்லை. தமிழக அரசு எங்கள் கோரிக்கையை பரிசீலிக்காமல் இருப்பதை கண்டிக்கிறோம் . எங்களின் கோரிக்கை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட நான்கு பெண்கள் உட்பட 35 பேரை கைது செய்து அனைவரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர் .சாலை மறியல் காரணமாக சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கைது செய்யப்பட்ட மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!