எங்கப்பா சாவியை காணோம்? வேட்பாளர் பிரநிதிகள் புலம்பல்

எங்கப்பா சாவியை காணோம்?  வேட்பாளர் பிரநிதிகள் புலம்பல்
X
திருவண்ணாமலையில் தபால் வாக்கு பதிவுக்கு வாக்குப்பெட்டியின் சாவி வராததால் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.

வந்தவாசி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிமாக ஏற்பாடு செய்யப்பட்ட வாக்குப் பதிவு மையத்தில் தபால் ஓட்டுப்போட வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. அதையொட்டி வாக்குப் பெட்டியை சரிபார்க்க அந்தந்த கட்சி வேட்பாளர்களின் பிரதிநிதிகள் வந்தனர். ஆனால் வாக்குப்பெட்டியை திறந்து காட்ட சாவி வந்து சேரவில்லை. வேட்பாளர்களின் பிரதிநிதிகள் வாக்குப்பதிவு அலுவலர்களிடம் சாவி தாமதமானதற்கு காரணம் கேட்டனர்.

அப்போது வாக்களிக்க வந்த காவல் துறையினர் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், காவல் துறையினர் தபால் ஓட்டுப்போட தாமதமானது. அப்போது, தாலுகா அலுவலக பணியாளர் சாவிைய கொண்டு வந்தார். வாக்குப்பெட்டி திறந்து காட்டப்பட்டு பின்னர் சீலிடப்பட்டது. அதன் பின், தபால் வாக்குப் பதிவு நடந்தது. இதையடுத்து காவல் துறையினர் வாக்கினை பதிவு செய்துவிட்டு சென்றனர்.

Tags

Next Story
ai based agriculture in india