முதியவரை தாக்கி பணம் நகை கொள்ளை

முதியவரை தாக்கி பணம் நகை கொள்ளை
X

பைல் படம்.

கீழ்பெண்ணாத்தூரில் கம்பியால் முதியவரை தாக்கி நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் எம்ஜிஆர் நகரில் வசித்து வருபவர் வெங்கடாஜலபதி (67) மனைவி பெயர் பிருந்தா ஒரு மகள் உள்ளார். இவர் திருமணம் ஆகி சென்றுவிட்ட நிலையில் வெங்கடாஜலபதியும், பிருந்தாவும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இதில் வெங்கடாஜலபதி தனது வீட்டின் ஒரு பகுதியில் மாவு மிஷின் வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று இரவு கணவனும் மனைவியும் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டின் கதவு தட்டப்படும் சத்தத்தை கேட்டு வெங்கடாஜலபதி எழுந்து சென்று கதவை திறந்து உள்ளார். அப்போது சிலர் இரும்பு கம்பியால் வெங்கடாஜலபதியை தாக்கியுள்ளனர். அதில் அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது, சத்தத்தை கேட்டு எழுந்து வந்த பிருந்தாவையும் அவர்கள் இரும்பு கம்பியால் தாக்கி மிரட்டியுள்ளனர்.

பிறகு மூன்று பேர் உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை, 2.50 கிலோ வெள்ளி மற்றும் ரூபாய் 70 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். சத்தம் போட்டால் குத்தி விடுவோம் என மிரட்டியதால் வெங்கடாஜலபதியும் பிருந்தாவும் பயத்தில் செய்வதறியாது நின்று இருந்தனர்.

கொள்ளையர்கள் சென்றதும் இருவரும் சத்தம் போட்டு உள்ளனர் அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக வந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கீழ்பெண்ணாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் கைரேகை நிரூபிணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

இது சம்பந்தமாக கீழ்பெண்ணாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் வளர்ந்து வரும் நகரமாக கீழ்பெண்ணாத்தூர் மாறிவரும் வேலையில் புறநகர் பகுதிகளில் வீடுகள் முளைத்துள்ளன எனவே போலீசார் இரவு நேர ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!