திருவண்ணாமலை அருகே போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
போதை பொருள் விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய வட்டாட்சியர் சரளா
கீழ்பென்னாத்தூர் அடுத்த சோமாசிபாடியில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் விழிப்புணர்வு குறித்து பிரச்சாரம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டா லி ன் காவல்துறைக்கு கொடுத்த உத்தரவின் பேரில் , போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்திடவும், போதைப் பொருட்கள் எந்த வடிவில் வந்தாலும் அதை அடியோடு ஒழிக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், போதைப் ஒழிப்பு தொடர்பான தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு காவல்துறை சார்பில் ” போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” திட்டம் தொடங்கப்பட்டு வருகின்றது.
அதன்படி , திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் திருவண்ணாமலை உதவி ஆணையர் (கலால்) செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு , கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் சரளா முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் ஏழுமலை, அட்மா குழு தலைவர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினர்.
கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள், உடல் நலம் பாதிப்பு, சமுதாய சீர்கேடுகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .
அப்போது உறுதி மொழியாக " போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எ ன து குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்தில் உள்ளவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த தனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.
போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கு மக்களின் நல்வாழ்விற்கான நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்" என எடுத்துக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர்கள் விழிப்புடன் செயல்பட்டு தங்களது கிராமத்தில் கள்ளச்சாராய நடமாட்டத்தைகண்காணித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சோமாசிபாடி வருவாய் ஆய்வாளர் காயத்ரி, கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், கிராம உதவியாளர்கள் ருத்ரமூர்த்தி, அம்பிகா, ஊராட்சி செயலர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu