வேட்டவலம் அருகே டிரைவரின் ஏ.டி.எம். கார்டை திருடிய வாலிபர் கைது

வேட்டவலம் அருகே டிரைவரின்  ஏ.டி.எம். கார்டை திருடிய வாலிபர் கைது
X
டிரைவரின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.1½ லட்சத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வேட்டவலம் அருகே டிரைவரின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.1½ லட்சத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வேட்டவலம் அருகே உள்ள சின்ன ஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் வயது . இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தேனிமலை பணிமனையின் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

இவர், கடந்த 21-ந்தேதி காலை 11 மணி அளவில் வேட்டவலத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் தனது கணக்கில் உள்ள வரவு-செலவு பார்க்க சென்றுள்ளார். அப்போது வெளியே இருந்த அடையாளம் தெரியாத நபரிடம் தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து வரவு-செலவை பார்க்க ரசீது எடுத்துத் தருமாறு கூறினார்.

பின்னர் அந்த நபர் ஏ.டி.எம். கார்டை ஏ.டி.எம். எந்திரத்தில் போட்டு ஸ்டேட்மெண்ட் வரவில்லை என கூறி சங்கரிடம் திருப்பி கொடுத்துவிட்டு சென்று விட்டார். பின்னர் 23-ந்தேதி வேட்டவலத்தில் உள்ள ஏ.டி.எம்.-ல் சங்கர் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுக்க முயன்ற போது ஏ.டி.எம். கார்டு வேலை செய்யவில்லை.

இதையடுத்து 25-ந்தேதி காலை திருவண்ணாமலையில் உள்ள வங்கிக்கு சென்று வங்கி ஊழியரிடம் தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து கார்டு வேலை செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

வங்கி ஊழியர் ஏ.டி.எம். கார்டை சரி பார்த்த போது அது அவருடையது அல்ல என்பது தெரியவந்தது. பின்னர் வங்கி ஊழியர் சங்கரின் கணக்கில் உள்ள வரவு-செலவு கணக்கை சரிபார்த்த போது சங்கரின் ஏ.டி.எம். கார்டு மூலம் திருவண்ணாமலையில் உள்ள ஏ.டி.எம். எந்திரம் மற்றும் நகை கடை ஆகிய இடங்களில் கார்டை பயன்படுத்தி ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் வேட்டவலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஏடிஎம் மையங்களில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை சோதனை செய்தனர்.

அதில் திருவண்ணாமலை தேனிமலை அருணாச்சலா பால் பண்ணை தெருவில் வசிக்கும் குருசாமி என்பவரின் மகன் ராவணன் என்பவர் சங்கரின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story