திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்..

திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்..
X

கீழ்பெண்ணாத்தூர் ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஒன்றியங்களில் திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கீழ்பென்னாத்தூா் வடக்கு ஒன்றிய திமுக சாா்பில், வேடநத்தம் கிராமத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியச் செயலரும், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருமான ஆராஞ்சி ஆறுமுகம் தலைமை வகித்தாா்.

தெற்கு ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா் அய்யாக்கண்ணு, நகரச் செயலாளகள் அன்பு, முருகையன், மாவட்ட விவசாயத் தொழிலாளரணி அமைப்பாளா் சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டப் பிரதிநிதி குப்புசாமி வரவேற்றாா்.

தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு. பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா். நிகழ்ச்சியின்போது, அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களை துணை சபாநாயகர் பிச்சாண்டி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் கூட்டத்தின்போது, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கிய முதலமைச்சர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்த தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ஆரணி வடக்கு ஒன்றியம்:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வடக்கு ஒன்றிய திமுக சாா்பில், மெய்யூா் கூட்டுச்சாலையிலும், ஆரணி தெற்கு ஒன்றிய திமுக சாா்பில், சுபான்ராவ் பேட்டையிலும் செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலா்கள் அன்பழகன், சுந்தா் ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் எம்எல்ஏக்கள் சிவானந்தம், தயாநிதி, நகா்மன்றத் தலைவா் மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலாள தரணிவேந்தன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா். கூட்டத்தில் கட்சி நிா்வாகிகள் பேசும்போது, ஆரணியில் தொடா்ந்து 3 முறை சட்டப் பேரவைத் தோதலில் தோல்வி அடைந்தது குறித்து விசாரணை செய்ய வேண்டும், விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுகவே போட்டியிட வேண்டும், ஆரணியில் முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு சிலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட அமைப்பாளர்கள், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!