கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் தி.மு.க. உறுப்பினர்களுக்கு உரிமைச்சீட்டு..!

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் தி.மு.க. உறுப்பினர்களுக்கு  உரிமைச்சீட்டு..!
X

நிகழ்ச்சியில் பேசிய துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் தி.மு.க. உறுப்பினர்களுக்கு உரிமைச்சீட்டுகளை துணை சபாநாயகர் வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி வேட்டவலம் அடுத்த அண்டம்பள்ளம் ஊராட்சியில் புதியதாக சேர்க்கப்பட்ட திமுக உறுப்பினர்களுக்கு உரிமைச்சீட்டுகளை துணை சபநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.

தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கலைஞர் அரை நூற்றாண்டு காலம் கட்டிக்காத்த தி.மு.க.வை மேலும் வலுப்படுத்திட ஒருகோடி உறுப்பினர் சேர்க்க உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற மாபெரும் முன்னெடுப்பு தொடங்கப்பட்டது

இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 4ந் தேதி புதிய உறுப்பினர் சேர்க்கையை சென்னையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிகளவில் புதியதாக உறுப்பினர்கள் சேர்க்க வேண்டுமென அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி வேட்டவலம் அடுத்த திருவண்ணாமலை கிழக்கு ஒன்றியம், அண்டம்பள்ளம் ஊராட்சியில் புதியதாக சேர்க்கப்பட்ட புதிய தி.மு.க. உறுப்பினர்களுக்கு உரிமைச்சீட்டு வழங்கும் நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் கண்ணன் ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி ஒன்றிய அவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகிக்க ஒன்றிய பொருளாளர் பெருமாள் அனைவரையும் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு திமுக புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் உரிமைச்சீட்டுகளை வழங்கி பேசியதாவது :

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று தமிழகத்தில் சிறப்பான திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார். ஏழை எளிய மக்களின் எண்ணங்களுக்கேற்ப பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளார்.

நமது ஒன்றியத்தில் 9 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை ஒன்றியம். கலைஞர் கோட்டையாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. அதில் முக்கியமான திட்டங்களில் ஒன்றான கலைஞரின் கனவு இல்ல திட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றி சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

திமுக பவள விழா கொண்டாடுகிறது. காங்கிரஸ் இயக்கத்தை போன்று நூற்றாண்டு விழா கொண்டாடும் பேரறிஞர் அண்ணா தொடங்கிய திமுக தந்தை பெரியார் மற்றும் கலைஞர் வழியில் இயக்கத்தை வலுவாக கொண்டு செல்கிறார். கடுமையான உழைப்பு அதன் மூலம் கிடைத்த வாக்குகள்தான் காரணம் கட்சி என்ன செய்தது என்பதைவிட கட்சிக்காக நாம் என்னசெய்தோம் என்பதை நினைப்பவர்கள் திமுக தொண்டர்கள். வரும் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 200 வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் அது உறுதி. என அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள், மற்றும் மாவட்ட ஒன்றிய திமுக கிளை நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!