திருவண்ணாமலையில் விவசாயிகளுக்கு வேளாண் பொருட்கள் வினியோகம்

திருவண்ணாமலையில் விவசாயிகளுக்கு வேளாண் பொருட்கள் வினியோகம்
X

திருவண்ணாமலையில்  ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தினை சட்டப் பேரவைத் துணை தலைவர் பிச்சாண்டி, கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை விவசாயிகளுக்கு வழங்கினார்

திருவண்ணாமலையில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது.

சென்னையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்ததையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பெண்ணாத்தூர், வந்தவாசி, செய்யாறு, சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் விவசாயிகளுக்கு வேளாண் பொருள்கள் வழங்கப்பட்டன.

கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த பொல குணம் கிராமத்தில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ், தலைமை வகித்தார் . திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் ஆட்சியர் பிரதாப் ,மாவட்ட வருவாய் அலுவலர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வேளாண் இணை இயக்குனர் பாலா வரவேற்றார்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக அரசு துணை சபாநாயகர் பிச்சாண்டி , வேளாண் வளர்ச்சித் திட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து 400க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள், வீட்டுத் தோட்ட காய்கறி விதைகள், பழச் செடிகள் , மரக்கன்றுகள் , கைத்தெளிப்பான், கால்நடைத்துறை மூலம் புல் நறுக்கும் கருவி, வேளாண் கருவிகள் உள்பட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக வேளாண்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த விவசாயக் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.

விழாவில் கீழ்பெண்ணாத்தூர் ஒன்றிய குழு துணை தலைவர் வாசுகி ஆறுமுகம், மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம், வேளாண் துணை இயக்குனர் மாரியப்பன், வேளாண் இணை இயக்குனர் அரசகுமார் ,கீழ்பெண்ணாத்தூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள் உள்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.வேளாண் இணை இயக்குனர் முருகன் நன்றி கூறினார்.

வந்தவாசியில் நடைபெற்ற விழாவில் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத் குமார் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் தென்னை மரங்கள், விதைகள் உள்ளிட்டவை வழங்கி இந்த திட்டம் குறித்து பொது மக்களுக்கு விளக்கிக் கூறினார்.

கண்ணமங்கலம் பகுதியில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட முகாமை போளூர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி பெருமாள் துவக்கிவைத்து விவசாயிகளுக்கு கைத்தெளிப்பான் ,தென்னங்கன்றுகள், மரக்கன்று காய்கறி விதை ஆகியவற்றை வழங்கி சிறப்புரையாற்றினார்.

ஆரணி ஒன்றியத்தில் நடைபெற்ற விழாவில் ஆரணி ஒன்றிய தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Tags

Next Story