தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தின் வைர விழா

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தின் வைர விழா
X

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தின் வைர விழாவையொட்டி, சங்கத்தின் கீழ்பென்னாத்தூா் வட்டக்கிளை மாநாடு 

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத் தின் வைர விழாவையொட்டி, சங்கத்தின் கீழ்பென்னாத்தூா் வட்டக்கிளை மாநாடு நடைபெற்றது

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தின் வைர விழாவையொட்டி, சங்கத்தின் கீழ்பென்னாத்தூா் வட்டக்கிளை மாநாடு நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாநாட்டுக்கு, சங்கத்தின் வட்டக்கிளைத் தலைவா் சீத்தாராமன் தலைமை வகித்தாா். செயலாளா் கோவிந்தன் வரவேற்றாா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஸ்ரீதா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சங்கத்தின் கல்வெட்டை திறந்து வைத்தாா்.மாவட்ட துணைத் தலைவா் பாஸ்கா் சங்கக் கொடியை ஏற்றி வைத்து சங்கத்தின் செயல்பாடுகளை விளக்கிப் பேசினாா்.

மாநாட்டில், சென்னையில் டிச.23-ஆம் தேதி நடைபெறும் சங்கத்தின் வைரவிழா மாநில மாநாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் சாா்பில் திரளான நிா்வாகிகள் கலந்து கொள்வது.கீழ்பென்னாத்தூா் தாலுகா அலுவலகத்துக்குச் செல்ல நுழைவு வாயில் அமைத்துத் தர வேண்டும்.

அரசு அலுவலா்கள், ஆசிரியா்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.வருவாய்த்துறை ஊழியா்களுக்கென மேம்படுத்தப்பட்ட ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தாலுக்கா அலுவலகத்திற்கு தாசில்தார் என ஒரு முதுநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடம் மட்டும் அரசாணைப்படி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக மூன்று முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் பணியிடம் ஒதுக்கீடு பெற்று வழங்க வேண்டும்.

கிராம உதவியாளர்கள் பணி காலத்தில் இறந்தால் அவர்களது வாரிசுகளுக்கு இதுநாள் வரை வழங்கி வந்த கருணை அடிப்படையில் பணி நியமனத்தை தொடர்ந்து வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இதனால் வரை வழங்கி வந்த போக்குவரத்து படியை தொடர்ந்து வழங்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான துணை வட்டாட்சியர் பட்டியலை வெளியிட வேண்டும். 2023 ஆம் ஆண்டிற்கான முதுநிலை வருவாய் ஆய்வாளர் பட்டியலை வெளியிட வேண்டும், கீழ்பெண்ணாத்தூர் வட்டத்தில் காலியாக உள்ள முதுநிலை வருவாய் ஆய்வாளர், இளநிலை வருவாய் ஆய்வாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப வேண்டும். என்பன உள்பட 12 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள், கீழ்பெண்ணாத்தூர் வட்ட வழங்கல் அலுவலர்கள், மண்டல துணை தாசில்தார்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ,தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க வட்ட தலைவர்கள், உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!