வேட்டவலத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அழிப்பு

வேட்டவலத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அழிப்பு
X

வேட்டவலத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை அதிகாரிகள் அகற்றினர்.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை அதிகாரிகள் அகற்றினர்.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே பொன்ன மேடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை அதிகாரிகள் இன்று மேற்கொண்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த மண்டல துணை தாசில்தார் கௌரி தலைமையிலான அதிகாரிகள், அரசுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்தனர்.

பின்னர் ஆக்கிரமிப்பு பகுதிகளை கண்டறிந்த அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது ஆக்கிரமித்து பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அழித்தனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா