கலைஞரின் கனவு இல்ல ஆணையை வழங்கிய துணை சபாநாயகர்!

கலைஞரின் கனவு இல்ல ஆணையை வழங்கிய துணை சபாநாயகர்!

கலைஞர் கனவு இல்லம் வேலைக்கான பணி ஆணைகளை வழங்கிய  சட்டப்பேரவை துணை சபாநாயகர்

கீழ்பெண்ணாத்தூரில் கலைஞரின் கனவு இல்ல ஆணையை பயனாளிகளுக்கு துணை சபாநாயகர் வழங்கினார்.

கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ்165 பயனாளிகளுக்கு வீடுகளுக்கு பழுது நீக்கம் உத்தரவை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 45 கிராம பஞ்சாயத்துகளிலும் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் விழா துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமையில் நடந்தது.

விழாவிற்கு மாவட்ட மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய ஆணையாளர் விஜயலட்சுமி அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் , சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 45 ஊராட்சிகளுக்கு உட்பட்ட ஊரக பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ் 165 பயனாளிகளுக்கு வீடுகளுக்கு பழுது நீக்கம் உத்தரவு மற்றும் 36பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் வேலைக்கான பணி ஆணைகளை வழங்கிப் பேசியதாவது:.

நமது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழக மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களும் சலுகைகளும் வழங்கி வருகிறார். ஏழை, எளிய வீடு இல்லாத பொதுமக்களுக்கு புதிய வீடுகள் கட்டவும், பழைய வீடுகளை பழுது பாா்க்கவும் பணி ஆணைகள் வழங்கப்படுகின்றன.

இந்தியாவிலேயே இதுபோன்ற சிறப்புத் திட்டங்கள் தமிழகத்தில் மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன. பணி ஆணை பெற்ற பயனாளிகள் மழைக்காலம் வருவதற்குள் வீடுகளை கட்டி முடித்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

மேலும் பெண்கள் அரசு பேருந்தில் விடியல் பயணம், பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை, ஆண் , பெண் என இருவருக்கும் உயர்கல்வி படிப்பதற்கு மாதந்தோறும் ரூ 1000 வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற எண்ணற்ற திட்டங்கள் தமிழக மக்களுக்காகவும் படிக்கும் இளைஞர்களுக்காகவும் குறிப்பாக பெண்களுக்காகவும் தமிழக முதல்வர் வழங்கி வருகிறார் என்றார்.

இதில் ஒன்றிய பொறியாளர்கள், துணை மற்றும் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , பணி மேற்பார்வையாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) அருணாசலம் நன்றி கூறினார்.

Next Story